Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
காலையில் அடிக்கடி இந்த அடையை செஞ்சு சாப்பிடுங்க.. உடல் எடை வேகமாக குறையும்...
Weight Loss Adai Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க ட்ரை செய்து கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் சத்தான, அதே சமயம் உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் உணவுகளை சேர்த்து வந்தால், உடல் எடை வேகமாக குறையும்.
இதுவரை உங்கள் டயட்டில் சுவையில்லாத உணவு தான் இருந்தது என்றால், உங்களின் டயட்டில் சுவையான அடையை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த அடை ருசியாக இருப்பதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும். மேலும் இந்த அடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். டயட்டில் இல்லாதவர்களும் இந்த அடையை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த எடையைக் குறைக்க உதவும் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எடையைக் குறைக்க உதவும் அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* துருவிய சுரைக்காய் - 1 கப்
* துருவிய கேரட் - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பசலைக்கீரை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - சிறிது
மல்லி சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* புளி - சிறிய துண்டு
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அத்துடன் சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், ஓமம்
மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதோடு துருவிய சுரைக்காய், கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, பூண்டு சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது மற்றும் 1/2 கப் பொடியாக
நறுக்கிய பசலைக்கீரையை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி, அடை மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் 1
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து,
கையில் நீரைத் தொட்டு, அப்படியே கல்லில் தட்டையாக பரப்பி விட
வேண்டும்.
* பின் உயர் தீயில் வைத்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால்,
சுவையான அடை தயார்.
* அடுத்து சட்னிக்கு ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், 3 பச்சை மிளகாய், சிறிது புளி, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்
பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் 1 கப் கொத்தமல்லியைத் தூவி, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து
இலைகள் சுருங்கும் வரை வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில்
போட்டு அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1/4 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு,
1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், மல்லி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications