Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
விநாயகர் சதுர்த்திக்கு உருளைக்கிழங்கை வைச்சு இந்த மாதிரி பாயாசம் செஞ்சு பாருங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Vinayagar Chaturthi Special Potato Payasam Recipe in Tamil: விநாயகர் சதுர்த்தி வந்தாலே வீட்டில் தனி உற்சாகம் வந்துவிடும். இந்த நாளில் வீட்டில் இனிப்புகள் செய்து விநாயகரை வழிபடுவது வழக்கம். இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வித்தியாசமான இனிப்பை செய்யலாம். நம் வீட்டில் ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம், பால் பாயாசம் என பல வகையான பாயாசங்கள் செய்வோம்.
சிலர் இன்னும் வித்தியாசமாக பழ வகைகளான அன்னாசி, வாழைப்பழம், ஆப்பிள், மற்றும் பலாப்பழத்தை வைத்து பாயாசம் செய்கிறார்கள். ஆனால் கிழங்கு வகைகளை வைத்து செய்யும் பாயாசத்தை செய்திருக்கிறீர்களா? நாம் தினசரி உணவில் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கை வைத்து விதவிதமாக வறுத்து, பொறித்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அதே உருளைக்கிழங்கை வைத்து எப்படி பாயாசம் செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- பால் - ½ லிட்டர்
- உருளைக்கிழங்கு - 1 (மீடியம் சைஸ்)
- பாசி பயறு - ½ கப்
- வெல்லம் - 1 கப்
- நெய் - 1 அல்லது 2 டீ ஸ்பூன்
- முந்திரி பருப்பு - 10 அல்லது 12
- திராட்சை - 10 அல்லது 12
- ஏலக்காய் பொடி - ¼ டீ ஸ்பூன்
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதனுடன் ½ கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- வெல்லம் நன்றாக கரைந்ததும் மண் மற்றும் தூசி இல்லாமல் வடித்து எடுத்து கொள்ளவும்.
- பின் அதை மீண்டும் நன்றாக கொதிக்க வைத்து தனியே எடுத்து கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை சேர்க்கவும்.
- பால் நன்றாக கொதிக்க துவங்கியதும் மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் பாசி பயறை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- பின் வறுத்த பருப்பை குக்கரில் சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- உருளைக்கிழங்கை மண் இல்லாமல் அலசி இரண்டாக வெட்டி அதை
பாசிப்பருப்புடன் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும்.
- பின் மூன்று அல்லது நான்கு விசில் விட்டு அடுப்பை அணைத்து விசில்
அடங்கும் வரை வைத்திருக்கவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
- மசித்த உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- வேக வைத்த பாசிப்பருப்பை நன்றாக மசித்து கொதித்து கொண்டிருக்கும் பாலில் சேர்க்கவும்.
- பின் அதை 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். அடிபிடிக்காமல் நன்றாக கிளறி விடவும்.
- அதனுடன் அரைத்து வைத்த உருளைக்கிழங்கு மற்றும் பால் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
- கடைசியாக காய்ச்சி வைத்த வெல்ல பாகு சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை அணைத்து இறக்கவும்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்க்கவும்.
- நெய் நன்றாக உருகியதும் முந்திரி பருப்பை உடைத்து அதில் சேர்த்து சிவக்க துவங்கியதும் திராட்சை சேர்க்கவும்.
- திராட்சை நன்றாக பாலூன் போல் உப்பி வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- பின் இதை பாயசத்தில் சேர்த்து கிளறினால் சுவையான உருளைக்கிழங்கு பாயசம் ரெடி!



Click it and Unblock the Notifications