Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Village Style Murungakkai Poricha Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முருங்கைக்காய் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் குழம்பு செய்வீர்களா? சற்று வித்தியாசமான ருசியில் முருங்கைக்காயை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்யுங்கள். வாய்க்கு ருசியாக ஒரு குழம்பு செய்து சாப்பிட நினைக்கும் போது, இந்த குழம்பை செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 4-5 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்காய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* புளித்தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்களை தட்டி சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்கு
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய முருங்கைக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து
மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம்
முருங்கைக்காயை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வெந்து கொண்டிருக்கும் முருங்கைக்காயுடன் சிறிது
புளித்தண்ணீரை சேர்த்து கலந்து 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி கிளறி 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications