Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இட்லி, தோசைக்கு ஏற்ற வெங்காய குருமா.. 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Vengaya Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் இதற்கு சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா? ஆனால் சற்று வித்தியாசமான அதே சமயம் ருசியான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் வெங்காயம் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் குருமா செய்யுங்கள். இந்த வெங்காய குருமா இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குருமாவை செய்தால் வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். குறிப்பாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காய குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2
* தக்காளி - 2
* தேங்காய் - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
குருமாவிற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* பட்டை - 1 சிறிய துண்டு
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (சதுரத் துண்டுகளாக நறுக்கியது)
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சோம்பு, கசகசா, மிளகு, சீரகம்,
வெங்காயம், தக்காளி, 1/4 கப் தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சதுரத் துண்டுகளாக வெட்டிய வெங்காயத்தை சேர்த்து,
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி, 5 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான வெங்காய குருமா தயார்.



Click it and Unblock the Notifications