Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
1 வெங்காயம், 1 தக்காளி இருந்தா.. 10 நிமிடத்தில் இந்த குருமாவை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Vellai Plain Tiffen Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசை என்றால் எப்போதும் சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை குருமாவை செய்யுங்கள். இந்த குருமாவிற்கு காய்கறிகள் அதிகம் தேவையில்லை. வெறும் வெங்காயம், தக்காளி இருந்தாலே போதுமானது.
இவ்விரண்டையும் கொண்டு 10 நிமிடத்தில் அருமையான சுவையில் குருமாவை செய்யலாம். இந்த குருமா இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இப்படி ஒருமுறை குருமாவை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள்.

உங்களுக்கு வெள்ளை ப்ளைன் டிபன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளை ப்ளைன் டிபன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* முந்திரி - 8
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
குருமா தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு
ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, முந்திரி ஆகியவற்றை
சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் துருவிய
தேங்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி,
குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குருமா சற்று கெட்டியானதும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான வெள்ளை ப்ளைன் டிபன் குருமா தயார்.



Click it and Unblock the Notifications