Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்.. வெள்ளை குருமாவை செய்வது எப்படி?
Vellai Kurma Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறிகள் நிறைய உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை சாப்பிடமாட்டார்களா?
அப்படியானால் அவர்களை காய்கறிகளை சாப்பிட வைக்க, அந்த காய்கறிகளைக் கொண்டு வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த வெள்ளை குருமா சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 3 (சிறியது)
* பீன்ஸ் - 5
* கேரட் - 1/2
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* காலிஃப்ளவர் - 1 கப்
* வெங்காயம் - 1
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு..
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* பச்சை மிளகாய் - 5
* முந்திரி - 5
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 6 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* சோம்பு - 1/4 இன்ச்
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 1
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 1
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு,
அதை நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேப் போல் பீன்ஸையும் நறுக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக வெட்டி, அதை உப்பு கலந்த
சுடுநீரில் சமையலில் பயன்படுத்தும் வரை ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரில் காலிஃப்ளவரைத் தவிர மற்ற காய்கறிகள்
அனைத்தையும் சேர்த்து, சிறிது உப்பு, சர்க்கரை மற்றும் தண்ணீர் 1/4
கப் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும.
* பிறகு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள்
அனைத்தையும் சேர்த்து முதலில் நீர் சேர்க்காமல் ஒரு முறை அரைக்க
வேண்டும். அதன் பின் நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள
காய்கறிகள் மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி கிளறி,
மிதமான தீயில் வைத்து, கிரேவி கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க
வேண்டும்.
* காலிஃப்ளவர் நன்கு வெந்தது, கிரேவி ரொம்பவும் கெட்டியாகிவிட்டால்,
சிறிது நீரை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கி, எலுமிச்சை சாற்றினை மேலே
பிழிந்து, கறிவேப்பிலையைத் தூவினால், சுவையான வெள்ளை குருமா
தயார்.
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications











