Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
இன்னைக்கு சிக்கன் வாங்குனா.. இப்படி வெள்ளை குருமா செய்யுங்க.. இட்லிக்கு சும்மா வேற லெவல்-ல இருக்கும்..
White Chicken Kurma Recipe In Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் காலை டிபனாக இட்லி செய்யப் போகிறீர்களா? அப்படியானால் அந்த இட்லிக்கு வழக்கமாக செய்யும் சிக்கன் குழம்பை செய்யாமல், ஒருமுறை வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த சிக்கன் வெள்ளை குருமாவை இட்லியுடன் சேர்த்து சாப்பிடும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
மேலும் சிக்கன் வெள்ளை குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். சொல்லப்போனால் 10 நிமிடத்தில் டக்கென்று செய்துவிடலாம். ஒருமுறை இந்த ருசியில் சிக்கன் குருமா செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து தருமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு வெள்ளை சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீழே சிக்கன் வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கையளவு
* சின்ன வெங்காயம் - 10
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
குருமா தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2-3 ஸ்பூன்
* ஏலக்காய் - 4
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* பெரிய வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சிக்கன் - 3/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 1 கையளவு
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கையளவு துருவிய தேங்காய், சின்ன
வெங்காயம், பொட்டுக்கடலை, முந்திரி, கசகசா, சோம்பு, மிளகு, சீரகம்
மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்கி, பின்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
முக்கியமாக தக்காளியை அதிகம் சேர்த்துவிட வேண்டாம். இல்லாவிட்டால்
வெள்ளை குருமாவின் நிறம் மாறிவிடும்.
* அதன் பின் அதில் சிக்கனை கழுவி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு 1-2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி,
புதினாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, 2-3
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான வெள்ளை சிக்கன் குருமா தயார்.



Click it and Unblock the Notifications