Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
சப்பாத்திக்கு ஏற்ற வெஜிடேபிள் வெள்ளை குருமா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Vegetable Soya White Kurma Recipe In Tamil: இரவு நேரத்தில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் டின்னராக இருக்குமா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்யுங்கள்.
அதுவும் வீட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மீல் மேக்கர் இருந்தால், அவற்றைக் கொண்டு வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமாவை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த குருமாவை செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்களும், வேலைக்கு செல்பவர்களும் இப்படியான சைடு டிஷ்ஷை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு வெஜிடேபிள் சோயா வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் சோயா வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 1
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - 1
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 3 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* மீல்மேக்கர் - 1/2 கப் (5 நிமிடம் சுடுநீரில் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 5 பல்
* முந்திரி - 10
* கசகசா - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, பட்டை, பிரியாணி
இலை, கல்பாசி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 5 நிமிடம் சுடுநீரில் ஊற வைத்து பிழிந்த மீல் மேக்கரை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், இஞ்சி, பூண்டு, முந்திரி,
கசகசா, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த விழுதை குக்கரில் உள்ள காய்கறிகளுடன் சேர்த்து,
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் பொடியாக நறுக்கிய சிறிது
கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து கிளறினால், சுவையான வெஜிடேபிள்
சோயா வெள்ளை குருமா தயார்.



Click it and Unblock the Notifications











