Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. உடல் சோர்வும் நீங்கும்.. உடல் எடையும் மடமடன்னு குறையும்...
Vegetable Saamai Kanji Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வரவர மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உடலுக்கு வலுசேர்க்கும் படி, சிறுதானியங்களுள் ஒன்றான சாமை அரிசியைக் கொண்டு கஞ்சி செய்து குடியுங்கள்.
அதுவும் அந்த கஞ்சியுடன் காய்கறிகளை சேர்த்து செய்யும் போது, சுவை மிகுதியாக இருப்பதோடு, சத்துக்கள் நிறைந்தும் இருக்கும். மேலும் இந்த கஞ்சியை அடிக்கடி செய்து குடித்து வந்தால், உடல் சோர்வு நீங்குவது மட்டுமின்றி, உடல் எடையும் குறையும்.

உங்களுக்கு வெஜிடேபிள் சாமை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் சாமை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 6 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* சாமை - 1 கப்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சாமை அரிசியை நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் அதில்
நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்த சாமையை சேர்த்து கிளற
வேண்டும்.
* பின் அதில் சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, குக்கரை மூடி 4
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், சுடுநீரை ஊற்றி கிளறி, குக்கரை
மீண்டும் அடுப்பில் வைத்து, ஒருமுறை கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத்
தூவி இறக்கினால், சுவையான வெஜிடேபிள் சாமை கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications