Latest Updates
-
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் கோதுமை மாவு இருந்தா.. இந்த மாதிரி சப்பாத்தி சுடுங்க.. வீட்டுல எல்லாரும் 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Vegetable Chapati Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி வெறும் சப்பாத்தியைத் தான் சுடுவீர்களா? உங்கள் வீட்டில் யாரும் காய்கறிகள் சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை காய்கறி சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் சப்பாத்தி மாவு பிசையும் போது, அத்துடன் ஒருசில காய்கறிகளை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். இந்த வெஜிடேபிள் சப்பாத்தி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருப்பதோடு, சத்தானதும் கூட. முக்கியமாக இப்படி சப்பாத்தியை செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வெஜிடேபிள் சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - பாதி (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கோதுமை மாவு - 1 கப்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய்,
வெங்காயம், முட்டைக்கோஸ், கொத்தமல்லியை சேர்த்து, அத்துடன் துருவிய
கேரட்டை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கைகளால்
பிசைந்து, 15 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு
பேஸ்ட் மற்றும் கோதுமை மாவை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பின் நீரை தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து தடவி, 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று
தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து
வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான வெஜிடேபிள் சப்பாத்தி
தயார்.



Click it and Unblock the Notifications











