Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
காய்கறி சோமாஸ் ரெசிபி

தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 கப்
உருளைக் கிழங்கு – 2
கேரட், பீன்ஸ், - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு - 2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கறிமசாலா தூள் - 1 டீஸ்பூன்
ப்ரெட் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் – 2 டீ ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
பூரணம் செய்முறை
உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்..
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி நன்றாக சேர்த்து வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும். மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் போட்டு நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமாக எரிய விடவும்.
காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். நன்றாக கெட்டியாக சேர்ந்தாற்போல் வர, ரொட்டித்தூள் சேர்த்து கிளறிக் கொள்ளலாம்.
சோமாஸ் செய்முறை
மைதா மாவை சலித்து எடுத்து கொஞ்சம் நெய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்து இலேசாக வட்டமாக தேய்த்து காய்கறி பூரணத்தை நடுவில் வைத்து மடித்து ஓரங்களை சோமாஸ் கத்தியால் வெட்டவும். இதேபோல் மொத்தமாக சோமாஸ்கள் தயார் செய்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணையைக் காய வைத்து செய்து வைத்துள்ள சோமாஸ்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
தொட்டுக்கொள்ள தக்காளி கெட்ச்அப்' ஏற்றது. மாலை நேரத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications
