Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
வெஜிடேபிள் பாஸ்தா சூப்
மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சூப் ஒரு நல்ல வயிற்றை நிரப்பும் உணவாக இருக்கும். அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா மற்றும் சில காய்கறிகளை பயன்படுத்தி, சூப் செய்தால், ஒரு நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும்.
இப்போது அந்த வெஜிடேபிள் பாஸ்தா சூப்பை எப்படி எளிதில் செய்வதென்று, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

பாஸ்தா - 1/2 கப்
காய்கறிகள் - 1/4 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி அல்லது விருப்பமான காய்கறிகள்)
கொண்டைக்கடலை - 2 1/2 டேபிள் ஸ்பூன்
பாஸ்தா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 (சிறியதில் பாதி மற்றும் பொடியாக நறுக்கியது)
பூண்டு - 3 பற்கள் (பொடியாக நறுக்கியது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காய்கறிகளை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து, அதனை தனியாக குக்கரில் போட்டு, 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, பாஸ்தாவை போட்டு, உப்பு சேர்த்து, பாஸ்தா வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி, நீரை வடிகட்டி, பின் அதனை தனியாக ஒரு பௌலில் போட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, வேக வைத்த கொண்டைக்கடலை, காய்கறிகளை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் பாஸ்தா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
காய்கறிகள் சாஸ் உடன் சேர்த்து ஒரு பதத்திற்கு வந்ததும், அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் இறுதியில் அதில் சோள மாவு சேர்த்து, நன்கு கிளறி விட்டு, கலவையானது சற்று கெட்டியாக, சூப் போன்று வரும் போது, அதனை இறக்கி, அதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாறினால், அருமையான வெஜிடேபிள் பாஸ்தா சூப் தயார்!!!



Click it and Unblock the Notifications