Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
துவரம் பருப்பு துவையல்
குளிர்காலத்தில் பெரும்பாலானோர் காய்ச்சல், சளி போன்றவற்றால் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்களுக்கு எதுவுமே சாப்பிட பிடிக்காது. ஆகவே அப்போது நிறைய வீட்டில் சுடு கஞ்சி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் இது சாப்பிட்டால், கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதால் தான். அப்படி சுடு கஞ்சி செய்து கொடுக்கும் போது, அத்துடன் தொட்டுக் கொள்வதற்கு துவையல் என்றால் சூப்பராக இருக்கும்.
அப்படி சுடு கஞ்சிக்கு சைடு டிஷ்ஷாக அருமையான துவரம் பருப்பு துவையலை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2-3
பூண்டு - 2 பற்கள்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பருப்பானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், பூண்டு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மென்மையாக அரைக்காமல், ஓரளவு அரைத்து இறக்கினால், சுவையான துவரம் பருப்பு துவையல் ரெடி!!!
இதனை சுடு கஞ்சி மற்றும் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
Image Courtesy: kamalascorner



Click it and Unblock the Notifications