Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இனிப்பான... தக்காளி சட்னி: பெங்காலி ரெசிபி
இதுவரை தக்காளி சட்னியை காரமாகத் தான் செய்து சாப்பிட்டிருப்போம். அதனை இனிப்பாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் செய்ததுண்டா? ஆம் இந்த மாதிரியான சட்னியானது பெங்காலியில் மிகவும் பிரபலமானது. இங்கு அந்த பெங்காலி ஸ்டைல் இனிப்பான தக்காளி சட்னியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றைப் படித்து செய்து, இட்லி, தோசை போன்றவற்றிற்கு சைடு டிஷ்ஷாக செய்து, உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
தக்காளி - 10
கடுகு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச்
உப்பு - 1/2 டீஸ்பூன்
புளிச்சாறு - 1/2 கப்
சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் இஞ்சியை தட்டி போட்டு, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை மிதமான தீயில் 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி, பின் புளிச்சாறு ஊற்றி மூடி வைத்து 2-3 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
கலவையானது வறட்சியடைய ஆரம்பிக்கும் போது, அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், பெங்காலி ஸ்டைல் இனிப்பான தக்காளி சட்னி ரெடி!!! இதனை குளிர வைத்து இட்லி, தோசையுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications