Latest Updates
-
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம்
உருளைக்கிழங்கு கோவைக்காய் சப்ஜி
குளிர்காலத்தில் கோவைக்காய் அதிகம் கிடைப்பதால், இந்த காய்கறியைக் கொண்டு பலவாறு சமைத்து சாப்பிடுங்கள். ஏனெனில் இந்த காய்கறி மிகவும் சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியமானதும் கூட. அதிலும் இதனை உருளைக்கிழங்குடன் சேர்த்து சப்ஜி போன்று செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
சரி, இப்போது உருளைக்கிழங்கு கோவைக்காய் சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோவைக்காய் - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 4
வெங்காய பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
பச்சை ஏலக்காய் - 3
பிரியாணி இலை - 1
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கோவைக்காயை நீரில் நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கு மற்றும் கோவைக்காய் சேர்த்து, உப்பு தூவி மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து, சீரகம், பெருங்காயத் தூள், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து 2-3 நிமிடம் தாளிக்க வேண்டும்.
அடுத்து வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு சர்க்கரை மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, வாணலியில் சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து உருளைக்கிழங்கு மற்றும் கோவைக்காய் சேர்த்து கிளறி, உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
காய்கறிகள் நன்கு வெந்துவிட்டால், அதில் கரம் மசாலா சேர்த்து கிளறி, மேலே நெய் ஊற்றி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு கோவைக்காய் சப்ஜி ரெடி!!!



Click it and Unblock the Notifications