Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சோயா பீன்ஸ் குழம்பு
சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடிய உணவுப் பொருள். எனவே இந்த சோயா பீன்ஸ் கொண்டு எளிய முறையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, மிகவும் சுவையான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற ரெசிபியும் கூட.
பேச்சுலர்கள் எளிதில் செய்யக்கூடியது. சரி, இப்போது அந்த சோயா பீன்ஸ் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் மணிகள்- 2 கப் (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள சோயாவை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு சோயாவை சேர்த்து நன்கு கிளறி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications