Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிறு கிழங்கு பெப்பர் ப்ரை
தற்போது மார்கெட்டில் விலை குறைவில் கிடைக்கும் கிழங்குகளில் ஒன்று தான் சிறு கிழங்கு. இந்த கிழங்கை சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் இந்த கிழங்கை ப்ரை செய்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.
இங்கு சிறு கிழங்கு பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்து சுவைத்துப் பாருங்கள். அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
சிறு கிழங்கு - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிறு கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் சிறு கிழங்கை போட்டு, சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள்
மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கிழங்கு வேகும் வரை மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து, கிழங்கை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் சிறு கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட்டு, உப்பு சேர்த்து மீண்டும் கிளற வேண்டும். கிழங்கானது லேசாக மொறுமொறுவென்று வரும் போது, அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சிறு கிழங்கு மிளகு ப்ரை ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications