Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சத்தான... சிறுகீரை பொரியல்
வாரம் ஒருமுறை கீரையை சாப்பிட்டு வந்தால், உடலில் இரும்புச்சத்து அதிகரித்து, உடல் வலிமையோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். அதிலும் சிறுகீரையை பொரியல் செய்து சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அதன் சுவையே அலாதியாக இருக்கும்.
இங்கு சிறுகீரை பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
சிறுகீரை - 1 கட்டு (நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய கீரையைப் போட்டு நன்கு வதக்கி, பின் உப்பு தூவி, சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி, மூடி வைத்து கீரையை நன்கு வேக வைக்க வேண்டும்.
கீரையானது நன்கு வெந்ததும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சிறுகீரை பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications