Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சத்தான... சாண்விட்ச் இட்லி

தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
மசாலாவுக்கு :
கேரட் - 1
பீன்ஸ் - 2
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, பின் கடுகு, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும்.
பின் அதோடு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும், அத்துடன் தக்காளி, நறுக்கிய காய்கறிகள், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் பச்சை வாசனை போனதும், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, அந்த மசாலாவை இறக்கி வைக்க வேண்டும்.
அடுத்து இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். பிறகு இட்லித் தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து, மேலும் அதன் மேல் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
மாவானது நன்கு வெந்ததும் அதனை எடுத்து பரிமாறுங்கள். இப்போது சுவையான சாண்விட்ச் இட்லி ரெடி!!!



Click it and Unblock the Notifications