Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஈஸியான... உருளைக்கிழங்கு வறுவல்
யாருக்கு தான் உருளைக்கிழங்கு பிடிக்காது? பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கு இல்லாமல் மதிய உணவு இருக்காது. அந்த அளவில் உருளைக்கிழங்கிற்கு நிறைய பிரியர்கள் உண்டு. மேலும் உருளைக்கிழங்கை பலவாறு சமைக்கலாம். இங்கு எளிமையான ஒரு உருளைக்கிழங்கு வறுவலை கொடுத்துள்ளோம். இதனை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். இது மதிய வேளையில் சாதத்திற்கு ஏற்ற ஒரு அருமையான சைடு டிஷ்.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு வறுவலைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3-4
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 3-4 பல் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய உருளைக்கிழங்கைப் போட்டு தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்கக் கொள்ள வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் உப்பு மற்றம மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். வெங்காயமானது நன்கு வதங்கியதும், தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி சேர்த்து பிரட்டி, உருளைக்கிழங்கை சேர்த்து, மசாலா நன்கு உருளைக்கிழங்குடன் சேரும் வரை கிளறி விட்டு, இறக்கினால், சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி!!!



Click it and Unblock the Notifications