Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாழைக்காய் கோப்தா
பொதுவாக கோப்தா என்பது ஒரு வட இந்திய ரெசிபி. அத்தகைய கோப்தாவில் நிறைய உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான வாழைக்காய் கோப்தாவை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து அதனை தவறாமல் முயற்சி செய்து பாருங்கள்.
இது நிச்சயம் வீட்டில் உள்ளோருக்கு பிடித்தவாறு இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோப்தாவிற்கு...
வாழைக்காய் - 2
பன்னீர் - 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது)
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கிரேவிக்கு...
பட்டை - 1
ஏலக்காய் - 1
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொரியது மற்றும் அரைத்தது)
பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 சிட்டிகை
மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 10 (1/4 கப் பாலில் ஊற வைத்து பேஸ்ட் செய்தது)
பிரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன் (அலங்கரிக்க)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் வாழைக்காயின் முனைகளை நறுக்கி விட்டு, இரண்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை 4 கப் தண்ணீரில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் 20-30 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். குறிப்பாக வாழைக்காயானது நன்கு மென்மையாக வெந்திருக்க வேண்டும்.
பிறகு நீரை வடித்து விட்டு, பின் குளிர வைத்து, தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் துருவிய வாழைக்காய், நறுக்கிய வெங்காயம், துருவிய பன்னீர், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பேஸ்ட், கொத்தமல்லி, மாங்காய் தூள், மல்லி தூள், கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சிறிது உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கெபள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி மற்றும் மிளகாய் பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, 8 நிமிடம் வேக வைத்து, பிறகு முந்திரி பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அடுத்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பின் தீயை குறைவில் வைத்து, 7-8 நிமிடம் கொதிக்க விட்டு, பின் பொரித்து வைத்துள்ள கோப்தாவைப் போட்டு, சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி, 7-10 நிமிடம் கழித்து, ப்ரஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லியால் அலங்கரிக்க வேண்டும்.
இப்போது சுவையான வாழைக்காய் கோப்தா ரெடி!!!
Image Courtesy: sailusfood



Click it and Unblock the Notifications