Latest Updates
-
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க..
முள்ளங்கி பொரியல்
முள்ளங்கி சாப்பிட்டால் உடலில் இருந்து வாய்வு வெளிவந்து கொண்டே இருக்கும் என்று பலரும் அதனை சாப்பிட மாட்டார்கள். ஆனால் முள்ளங்கியை சமைத்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும் என்பது தெரியுமா? அதிலும் அதனை சாம்பார் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதேப்போன்று பொரியல் செய்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
இங்கு முள்ளங்கி பொரியலை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 1
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
முதலில் முள்ளங்கியின் தோவை சீவி விட்டு, பின் அதனை துருவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காயை மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் துருவிய முள்ளங்கி மற்றும் உப்பு சேர்த்து 8-10 நிமிடம் நன்கு முள்ளங்கி வேகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் மிளகாய் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் பிரட்டி, பின் தேங்காயை சேர்த்து 2-3 நிமிடம் பிரட்டி இறக்கினால், முள்ளங்கி பொரியல் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications