Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பீட்ரூட் மற்றும் தேங்காய் பொரியல்
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். எனவே வாரம் ஒரு முறை பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த சோகை ஏற்படுவதில் இருந்து தள்ளி இருக்கலாம். அதிலும் பீட்ரூட்டை நன்கு வேக வைத்து சாப்பிட்டால் தான் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
இங்கு பீட்ரூட் மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யக்கூடிய பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 3 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
வரமிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து விட்டு, பீட்ரூட்டை மட்டும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் வேக வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 4 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
இறுதியில் துருவிய தேங்காயை போட்டு, 3-4 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் மற்றும் தேங்காய் பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications