Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
காளான் ரோஸ்ட்
காளான் அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். இந்த காளானை பலருக்கு மசாலா செய்து மட்டும் தான் சாப்பிடத் தெரியும். ஆனால் காளானைக் கொண்டு அருமையான ரோஸ்ட் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் காளான் ரோஸ்ட் மிகவும் சுவையான சைடு டிஷ் மட்டுமின்றி, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
இங்கு அந்த காளான் ரோஸ்ட் ரெசிபியை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்யப்பட்ட காளான் - 3/4 கப் (நறுக்கியது)
சோம்பு - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு...
கெட்டியான தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
வாணலியில் என்ன நீர்ம நிலையில் இருக்கும் மசாலாவானது சுண்டியதும், அதில் தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பிரட்டி இறக்கினால், காளான் ரோஸ்ட் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications