Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மஸ்ரூம் ரைஸ்
சைவ உணவுகள் மிகவும் பிடிக்கும் என்றால் அவர்களுக்கு மஸ்ரூம் கூட பிடிக்கும். அத்தகைய மஸ்ரூமை அதிகம் சாப்பிட்டால், புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து அவற்றை வராமல் தடுப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்தகைய மஸ்ரூமை நன்றாக வாய்க்கு சுவையாக இருக்கும் வகையில் சமைத்து உண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள், ஈஸியாக ஒரு கலவை சாதம் செய்து சாப்பிடலாம். அத்தகைய மஸ்ரூமை வைத்து எப்படி கலவை சாதம் செய்வதென்று பார்ப்போமா!!!

பாசுமதி அரிசி - 2 கப்
காளான் - 200 கிராம்
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1 கப் (நறுக்கியது)
முட்டை கோஸ் - 1 கப் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
புதினா - சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காளானை நன்கு கழுவ வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும், அதில் கழுவிய காளானை போட்டு, வடிகட்டி விடவும். பின் அதனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதனை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா தூள், சேர்த்து கிளறவும். பின்னர் அதில் நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய், காளான், முட்டை கோஸ், மல்லி, புதினா மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு வதக்கவும்.
காய்கள் அனைத்தும் வதங்கியதும், அதில் சாதத்தை போட்டு நன்கு கிளறவும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, உப்பை சரிபார்த்து, ஒரு முறை பிரட்டி, 3-4 நிமிடம் தட்டை வைத்து மூடி, தீயை குறைவில் வைத்து, பிறகு இறக்கவும்.
இப்போது சுவையான மஸ்ரூம் ரைஸ் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் டேஸ்ட் ஆக இருக்கும்.



Click it and Unblock the Notifications