Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மிக்ஸ்டு வெஜிடேபிள் முந்திரி குழம்பு
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளை காய்கறிகளை சாப்பிட வைக்க வேண்டுமானால், அவர்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள மிக்ஸ்ட் வெஜிடேபிள் முந்திரி குழம்பு ரெசிபியை செய்து கொடுங்கள். இது மிகவும் சுவையுடன் இருப்பதோடு, அவர்களுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும்.
மேலும் இந்த சைடு டிஷ்ஷை சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிடலாம். சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 கப்
காலிஃப்ளவர் - 1 கப்
முந்திரி - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 டேபிள் தூள்
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (அரைத்தது)
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, முந்திரியை போட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் வேக வைத்த முந்திரி, வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், தேங்காய் பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் காய்கறிகளைப் போட்டு, மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
காய்கறிகளானது நன்கு வெந்தமும், அதில் வெந்தய இலையை தூவி, பின் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட் கலவையை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மிக்ஸ்ட் வெஜிடேபிள் முந்திரி குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications