Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குர்குரி பிந்தி ரெசிபி
நிறைய பேருக்கு வெண்டைக்காய் என்றால் பிடிக்காது. ஏனெனில் அது வளவளவென்று இருப்பதால் தான். ஆனால் அந்த வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே இதனை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
அதிலும் இதனை வட இந்திய ஸ்டைலில் குர்குரி பிந்தி என்னும் வெண்டைக்காயை மொறுமொறுப்பாக பொரிக்கும் ரெசிபியை செய்தால், வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த குர்குரி பிந்தி ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 250 கிராம்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
எலுமிச்சை - 1
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை நன்கு நீரில் அலசி, துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை நீளமாக நான்கு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு வெண்டைக்காய், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா சேர்த்து கலந்து 10-12 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இப்படி ஊற வைப்பதால், வெண்டைக்காயானது சிறிது நீரை வெளியேற்றும். இப்போது அதில் கடலை மாவு மற்றும் சோள மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள வெண்டைக்காயை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
பின் பொரித்த வைத்துள்ள வெண்டைக்காயின் மீது எலுமிச்சை சாற்றினை தெளித்தால், குர்குரி பிந்தி ரெசிபி ரெடி!!! இதனை சாதத்துடனோ அல்லது ஸ்நாக்ஸாகவோ கூட சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications