Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் அரிய புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
ஆண்களே! சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
இந்தியாவின் டாப் 5 பணக்கார முதலமைச்சர்கள் இவங்கதான் - தமிழ்நாடு முதலமைச்சர் எத்தனாவது இடத்தில் உள்ள தெரியுமா? -
காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்.. -
வெயில் மற்றும் மழையால் வீட்டில் புழுக்கமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்.. -
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் வீட்டில் பணமும் ஆரோக்கியமும் குறையாமல் இருக்கணுமா? இந்த 5 வாஸ்து ரகசியங்களை உடனே பின்பற்றுங்க! -
முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளும்.. அவற்றை தடுக்கும் உணவுகளும்..
கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

தேவையான பொருட்கள்:
வெள்ளை பூசணிக்காய் - 1 கப்
வாழைக்காய் - ஒன்று
தேங்காய - 1/2 கப் (துருவியது)
புளிப்புத் தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளின் தோல்களை நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைக்க வேண்டும்.
அதற்குள் மிக்ஸியில் பச்சைமிளகாய், துருவிய தேங்காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதனை காய்கறிகள் வெந்ததும், அதனுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின்னர் புளித்த தயிரை அதோடு சேர்த்து, நுரை வரும் வரை கொதித்ததும் இறக்கிவிடவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அந்த காய்கறி கலவையுடன் சேர்த்து, கிளறி விட வேண்டும்.
இப்போது சுவையான பூசணி கூட்டு ரெடி!!! இதனை சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications