Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஜவ்வரிசி ஊத்தப்பம்

தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - 1 கப்
அரிசி - 1 கப்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிது
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க :
பச்சை மிளகாய் - 4-6
இஞ்சி - 1/2 இஞ்ச்
தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஜவ்வரிசி மற்றும் அரிசியை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பின் அரிசி மற்றும் ஜவ்வரிசியை நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கிரைண்டரில் அரிசியைப் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஜவ்வரிசியைக் போட்டு நன்கு நைஸாக அரைக்கவும். அதனை மறக்காமல் தோசை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த மாவில் தயிர், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு மற்றும் அரைத்த மிளகாய் கலவையை சேர்த்து கலக்கவும். வேண்டுமென்றால் தண்ணீரை ஊற்றியும் கலக்கிக் கொள்ளலாம்.
பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும், அந்த மாவை கல்லில் தடிமனாக ஊத்தாப்பம் போல் விட்டு எண்ணெய் விட்டு, பின் திருப்பிப் போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான ஜவ்வரிசி ஊத்தப்பம் ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications