Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ஹைதராபாத் தயிர் வெண்டைக்காய் மசாலா
மதிய வேளையில் எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து அழுத்துப் போய்விட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமான ஸ்டைலை ட்ரை பண்ணலாமே! அதிலும் நன்கு காரமாக இருக்கும் ஹைதராபாத் ஸ்டைலில் உள்ள, அனைவருக்கும் பிடித்த வெண்டைக்காய் மற்றும் தயிரை வைத்து ஒரு மசாலா செய்து பார்க்கலாம்.
அந்த ஹைதராபாத் ஸ்டைல், தயிர் வெண்டைக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 500 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 8
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, துணியால் துடைத்து, நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் முந்திரியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, துருவிய தேங்காயுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, இறக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மாங்காய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 1 நிமிடம் கொதிக்க வைத்து, மீதமுள்ள தண்ணீரை சேர்த்து கிளறி, பின் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட்டு, இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான ஹைதராபாத் தயிர் வெண்டைக்காய மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications