Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
கொள்ளு குருமா!!!

தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 2
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
வெங்காயம் - 1
தக்காளி - 3
வரமிளகாய் - 6
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் நீளத்துண்டு
பூண்டு - 7 பல்லு
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைச் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, அதனை நறுக்கிக் கொள்ளவும். பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் கொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதனை குக்கரில் போட்டு, தேவையான தண்ணீரை ஊற்றி, விசில் விட்டு வேக வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.
பின் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை தொடர்ந்து வதக்க வேண்டும்.
வாசனை நன்கு வரும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு, கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.
இப்போது சுவையான கொள்ளு குருமா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை நறுக்கித் தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications