Latest Updates
-
ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு கடலால் உருவாகியுள்ள புதிய ஆபத்து என்ன தெரியுமா? -
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க... -
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ஹரியாலி கொண்டைக்கடலை மசாலா
அனைவருக்குமே சப்பாத்தி மற்றும் பூரிக்கு சட்னி, உருளைக்கிழங்கு மசாலா செய்து சாப்பிட்டு போர் அடித்திருக்கும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒரு அருமையான ரெசிபியைப் பரிந்துரைக்கிறது. அதை முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள். அந்த ரெசிபிக்கு பெயர் ஹரியாலி கொண்டைக்கடலை மசாலா. மேலும் இந்த ரெசிபியானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்ற ஒரு ரெசிபி.
இப்போது அந்த ஹரியாலி கொண்டைக்கடலை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 250 கிராம்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
புதினா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 8 பற்கள்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை நீரில் குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
குக்கரில் உள்ள விசிலானது போனதும், அதனை திறந்து, நீரை வடித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பூண்டு, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வேண்டுமானால் தண்ணீர் சிறிது ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 4-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறி, வேண்டுமானால், சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான ஹரியாலி கொண்டைக்கடலை மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications