Latest Updates
-
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது!
சுவையான...அவியல்!!!

தேவையான பொருட்கள் :
சௌசௌ - 1 கப் (நீளமாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 கப் (நீளமாக நறுக்கியது)
கேரட் - 1 கப் (நீளமாக நறுக்கியது)
பூசணிக்காய் - 1 கப் (நீளமாக நறுக்கியது)
வாழைக்காய் - 1 கப் (நீளமாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
தயிர் - 1/2 கப்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அனைத்து காய்கறிகளையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, அதில் உள்ள நீரை வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் காய்கறிகள், அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் சிறிது உப்பை சேர்த்து, கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அதில் தயிரை ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்மு தாளித்து, பின் வெங்காயம் சேர்த்து, அதனை பொன்னிறமாக வதக்கி, அத்துடன் அந்த காய்கறி கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு, கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்.
இப்போது சுவையான அவியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications