Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பேபிகார்ன் பஜ்ஜி
மாலை மங்கும் நேரத்தில், நல்ல சூடாகவும், மொறுமொறுவென்றும் டீ அல்லது காபியுடன் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பலரது நினைவிலும் வருவது பஜ்ஜி, போண்டா போன்றவை தான். ஆனால் இதுவரை பஜ்ஜியில் உருளைக்கிழங்கு பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, பிரட் பஜ்ஜி என்று தான் செய்திருப்போம். ஆனால் பேபிகார்னை வைத்து பஜ்ஜி செய்திருப்போமா!
இப்போது அந்த பேபிகார்னை வைத்து எப்படி மொறுமொறுவென்று பஜ்ஜி செய்வதென்று, அதன் செய்முறையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பேபிகார்ன் - 8-10
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோடா உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பேபிகார்னை நீளமாக இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சோடா உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பேபிகார்னை போட்டு பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பேபிகார்னை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி!!! இதனை மல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications