Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
சுவையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு...

தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் - 1 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
துருவிய தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
வெங்காயம் - சிறிது
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் அந்த முட்டைக் கோஸை நீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து மிக்ஸியில் துருவிய தேங்காய், சீரகம் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பாசிப்பருப்பை கழுவி வைத்துக் கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் கழுவிய பாசிப்பருப்பை போட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
பருப்பானது பாதி அளவு வெந்தவுடன் அதில் நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், தக்காளி மற்றும் அரைத்த தேங்காய் கலவையைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, மூடி போட்டு வேக வைக்கவும். பின் அவை அனைத்தும் வெந்தவுடன் அதனை இறக்கி வைக்கவும்.
பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி தாளித்து, அந்த பருப்புக் கலவையில் கொட்டவும்.
இப்போது அருமையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு தயார்!!! இதனை சாதத்திற்கும், சாப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications