Latest Updates
-
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு
அக்டோபர் மாதத்தில் முட்டைக்கோஸ் அதிகம் கிடைக்கும். ஆகவே இந்த முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய பல சத்துக்கள் கிடைக்கும். ஏனெனில் முட்டைக்கோஸில் உடல்நல நன்மைகள் ஏராளம் உள்ளது. மேலும் இதன் விலை மலிவாக இருப்பதால், வாரத்திற்கு 2 முறை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.
அதிலும் முட்டைக்கோஸை பருப்புடன் சேர்த்து கூட்டு போன்று செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டலாம். இப்போது அந்த முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
தக்காளி - 1-2 (நறுக்கியது)
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய், சோம்பு, சீரகம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பருப்பை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பை வேக வைக்க வேண்டும்.
பருப்பானது ஓரளவு வெந்ததும், அதில் முட்டைக்கோஸை சேர்த்து, பருப்பு நன்கு மென்மையாக மாறும் வரை வேக வைக்க வேண்டும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், மற்றொரு அடுப்பில் உள்ள பருப்பு கலவையை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Image Courtesy: ammas



Click it and Unblock the Notifications