Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கத்திரிக்காய் கடைசல்

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 4
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, சீரகத்தூள், வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு வேக வைத்த கத்திரிக்காய் கலவையை ஒரு மண் பாத்திரம் அல்லது ஏதேனும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, அந்த கத்திரிக்காய் கலவையில் ஊற்றி, தேவையான அளவு உப்பை போட வேண்டும்.
பின் மத்தை வைத்து அதனை கடைந்து கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான கத்திரிக்காய் கடைசல் ரெடி!!! இதனை இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications