Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
பிரட் ஆனியன் பொடிமாஸ்
மாலையில் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு அருமையான சுவையில் 10 நிமிடத்தில் ஏதேனும் செய்து கொடுக்க நினைத்தால், பிரட் ஆனியன் பொடிமாஸ் செய்து கொடுங்கள். இது நிச்சயம் உங்கள் குழந்தை விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
மேலும் பேச்சுலர்கள் கூட இதனை காலையில் செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பிரட் ஆனியன் பொடிமாஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பிரட் - 8 துண்டுகள்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 10 கிராம் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
மிளகு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - 1
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி பிரட்டி, கொத்தமல்லியைத் தூவினால், பிரட் ஆனியன் பொடிமாஸ் ரெடி!!!



Click it and Unblock the Notifications