Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்
பொதுவாக பொரியல் என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்து செய்யப்படுவதாகும். அப்படி செய்யும் பொரியலில் பெரும்பாலானானோர் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு பொரியல் தான். ஆனால் அந்த உருளைக்கிழங்குடன், பீன்ஸை சேர்த்து பொரியல் செய்தால், அதன் சுவையே தனி தான்.
இங்கு அந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 5-6 (தோலுரித்து, நறுக்கியது)
பீன்ஸ் - 10-12 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின்பு பீன்ஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தட்டு கொண்டு மூடி 10 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
காய்கறிகளானது நன்கு வெந்த பின்னர், அதில் மிளகாய் தூய் மற்றும் மல்லி தூள் சேர்த்து கிளறி, பச்சை வாசனை போனதும் இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications