Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
முட்டை சேர்க்காத வெஜ் ஆம்லெட் - எப்படி செய்றது-ன்னு பாருங்க.. ருசி பிரமாதமா இருக்கும்.. அடிக்கடியும் செய்வீங்க
Veg Omelette Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்து போரடித்தவிட்டதா? இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட ஒரு அருமையான டிபனை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் முட்டை சேர்க்காமல் சூப்பர் டிபனை செய்ய நினைத்தால், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றை சேர்த்து சைவ ஆம்லெட்டை செய்யுங்கள். இது செய்வதற்கு ஒருசில எளிய பொருட்களே போதுமானது. மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு வெஜ் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 3
* கேரட் - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ராகி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* எள்ளு விதைகள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு,
அவற்றை தனித்தனியாக துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் துருவிய உருளைக்கிழங்கை மட்டும் நீரில் போட்டு அலசிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நீரில் அலசிய உருளைக்கிழங்கை எடுத்து,
அத்துடன் துருவிய கேரட்டையும் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை
சேர்க்க வேண்டும்.
* பிறகு ராகி மாவு மற்றும் கடலை மாவை எடுத்து, அத்துடன் எள்ளு
விதைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக
நீரை ஊற்றி, ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், சிறிது
எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ளதை கல்லில் ஊற்றி, வட்டமாக
பரப்பிவிட்டு, மேலே எண்ணெய் ஊற்றி, மூடி வைத்து 3-4 நிமிடம் மிதமான
தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, திருப்பிப் போட்டு 2 நிமிடம் வேக வைத்து
எடுத்தால், சுவையான வெஜ் அம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications