Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
கிட்னியை பாதுகாக்கும் சத்தான வாழைத்தண்டு தோசை ரெசிபி - செஞ்சு பாருங்க, ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது
Vazhaithandu Dosai Recipe in Tamil: தோசை என்பது தென்னிந்தியர்களுடைய பிரதான உணவாக இருந்து வருகிறது. பெரும்பாலான தென்னிந்தியர்களால் தோசை இல்லாமல் வாழவே முடியாது. தினமும் காலை அல்லது மாலை ஒரு முறையாவது தோசை சாப்பிடுவது நமது வழக்கமாக மாறிவிட்டது. அரிசி மாவு தோசை சாப்பிடுவது சுவையானதாக இருந்தாலும் அதனால் பெரிய அளவில் எந்த நன்மைகளும் கிடைப்பதில்லை.

ஒரே மாதிரியாக தோசை சாப்பிடாமல் அதனுடன் வேறு பொருட்களை சேர்த்து தோசை சுடுவது அதன் சுவையை அதிகரிப்பதுடன் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். சில காய்கறிகளை சேர்த்து தோசை மாவுடன் சேர்த்து தோசை சுடுவது அதனால் கிடைக்கும் நன்மைகளை அதிகரிக்கும். அந்த வகையில் வாழைத்தண்டை சேர்த்து வித்தியாசமான வழியில் சேர்த்து மாவுடன் சேர்த்து வாழைத்தண்டு தோசை செய்யலாம். வாழைத்தண்டு எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை நாம் நன்கு அறிவோம். இந்த முறையில் செய்து கொடுக்கும் போது வாழைத்தண்டு பிடிக்காதவர்கள் கூட அதை விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சத்தான வாழைத்தண்டு தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- தோசை மாவு - 4 கப்
- வாழைத்தண்டு - 1
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - 1/2 இன்ச்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - 1/4 ஸ்பூன்
- எண்ணெய் அல்லது நெய் - தோசை மீது ஊற்ற
- தண்ணீர் - சிறிதளவு(வாழைத்தண்டை அரைக்க)
செய்முறை:
- வாழைத்தண்டைக் கழுவி வட்ட வடிவத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பயன்படுத்தும் வரை மோரில் ஊறவைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சீரகம் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைக்கவும்.
-இதில் நறுக்கிய வாழைத்தண்டைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அதிகப்படியான தண்ணீர் சேர்க்க வேண்டாம். கெட்டியான, ஆனால் மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- கெட்டியான தோசை மாவை எடுத்து, அதனுடன் இந்த அரைத்த விழுதைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, உப்பின் அளவை சரிபார்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- மாவின் பதம் சரியாக இருக்க, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
- இதை மெல்லியதாகவோ அல்லது சற்றுத் தடிமனாகவோ தோசைக் கல்லில் ஊற்றவும். தோசையைச் சுற்றி எண்ணெய் அல்லது நெய்யை விடவும். தோசையைப் புரட்டிப் போட்டு, மறுபுறமும் வேகவிட்டு தட்டுக்கு மாற்றவும்.
- இந்த வாழைத்தண்டு தோசைக்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications