Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
வரகரிசியை வெச்சு ஒருவாட்டி இப்படி பொங்கல் செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்..
Varakarisi Pongal Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது பொங்கல் செய்து சாப்பிடுங்கள். பொதுவாக பொங்கலை பச்சரிசி கொண்டு தான் செய்வார்கள். ஆனால் சிறு தானியங்களைக் கொண்டும் பொங்கல் செய்யலாம் தெரியுமா?
அதுவும் வரகரிசியைக் கொண்டு பொங்கல் செய்யும் போது, அது சுவையாக இருப்பது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இதில் நார்ச்சத்து, புரோட்டீன் அதிகம் இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், வரகரிசி பொங்கலை அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு வரகரிசி பொங்கல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வரகரிசி - 1/2 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் வரகரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
சுத்தமான நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை
சேர்த்து நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பு சேர்த்து
வறுக்க வேண்டும்.
* பின் வரகரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை
வடிகட்டிவிட்டு, வரகரிசியை மட்டும் குக்கரில் போட்டு சிறிது நேரம்
வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் 4 கப் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து,
குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காய தூள் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொங்கலுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான வரகரிசி பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications









