Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சிருச்சா? இந்த வரகு கொள்ளு பொங்கல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் சூப்பரா இருக்கும்...
Varagu Kollu Pongal Recipe in Tamil: உணவே மருந்து என்னும் பழமொழிகளை பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம் அல்லது படித்திருப்போம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல வழிகளை முயற்சி செய்வார்கள். உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி, மற்றும் உணவு கட்டுப்பாடு என பலவற்றை முயற்சி செய்வார்கள்.
அதில் உணவு கட்டுப்பாடு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை பின்பற்றுவார்கள். ஆனால் நாம் முன்னோர்கள் இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவன்னு கொள்ளு என உடல் எடையை குறைக்க விரும்புவோர்க்கு ஏற்ற தீர்வை எளிமையாகவே கூறி இருக்கிறார்கள்.

கொள்ளு உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதை போலவே சிறுதானியங்களும் முக்கிய இடத்தை பெறுகிறது. சிறுதானியத்தில் ஒன்றான வரகையும், கொள்ளையும் சேர்த்து சமைத்தால் சுவையாக இருப்பதோடு எளிதாக உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. ஆரோக்கியம் என்றதும் வழக்கம் போல் கஞ்சி என வெறுப்பாகாமல், இப்படி சுவையாக வரகு கொள்ளு பொங்கல் செய்து பாருங்கள். உங்கள் உடல் எடை குறைப்பில் முதல் படியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி - 200 கிராம்
- கொள்ளு - 50 கிராம்
- சீரகம் - 2 டீ ஸ்பூன்
- மிளகு - 12 அல்லது 15
- நெய் - 3 டீ ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 3 டீ ஸ்பூன்
- இஞ்சி - சிறிய துண்டு (1 இன்ச் அளவு)
- பச்சை மிளகாய் - 1
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கொள்ளுப் பயறை இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் அலசி இரண்டு
மணி நேரம் ஊறவைக்கவும்.
- வரகரிசியை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து இரண்டு முறை நன்றாக
அலசி கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் சுத்தமாக அலசி பொடிப்பொடியாக நறுக்கி
கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து
ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.
- பின் கருவேப்பிலையை தனியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்
விட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து
காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து
தாளிக்கவும்.
- பின் அதில் அரைத்து வைத்த கருவேப்பிலை விழுது சேர்த்து
கிளறவும்.
- அதனுடன் அரைத்து வைத்த இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்த்து
வதக்கவும்.
- கொத்தமல்லி இலையை மண் இல்லாமல் சுத்தமாக அலசி சேர்த்து நன்கு
வதக்கவும்.
- பின் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
- அதில் கொள்ளு, வரகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை
மூடி வேக விடவும்.
- ஆறு விசில் விட்டு இறக்கி பிரஷர் அடங்கும் வரை ஆற விடவும்.
- பின் குக்கரை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி கிளறி இறக்கினால்
சுவையான வரகு கொள்ளு பொங்கல் ரெடி!
- சாதாரண அரிசியை விட சிறுதானியங்கள் இறுகும் தன்மையை கொண்டிருப்பதால்
தண்ணீர் அதிகமாக சேர்த்து கொள்ளவும்.



Click it and Unblock the Notifications