Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
காலையில் ஒரே மாதிரி தோசை சுடாம.. ஒருடைம் இந்த உடுப்பி தக்காளி தோசையை ட்ரை பண்ணி பாருங்க..
Udupi Tomato Dosa Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் தோசை தான் செய்வீர்களா? எப்போதும் வெறும் தோசையை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை உடுப்பி தக்காளி தோசையை செய்யுங்கள். இந்த தக்காளி தோசையானது ரவா தோசையைப் போன்றே இருக்கும்.
முக்கியமாக வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் டக்குன்னு ஒரு தோசையை சுட்டு சாப்பிட நினைத்தால், இந்த தோசையை செய்து சாப்பிடலாம். இந்த தக்காளி தோசைக்கு தேங்காய் சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு உடுப்பில் தக்காளி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி தக்காளி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 2
* சின்ன வெங்காயம் - 5-6
* பூண்டு - 4
* கோதுமை மாவு - 1/4 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளியை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்க்க
வேண்டும்.
* பிறகு அதில் 1/4 கப் கோதுமை மாவு, 1/2 கப் அரிசி மாவு சேர்த்து, 1
டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க
வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சிறிது பொடியாக
நறுக்கிய கொத்தமல்லி மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து, ரவா தோசை
பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் ரவா தோசையை
சுடுவது போன்று கலந்து வைத்துள்ள மாவை கரண்டியில் அள்ளி ஊற்றி,
எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான உடுப்பி
தக்காளி தோசை தயார்.
Image Courtesy: Dindigul Food Court



Click it and Unblock the Notifications