3 தக்காளியும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...

Posted By:

Tomato Rava Dosa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை தான் செய்வீர்களா? ஆனால் தோசை மாவு மிகவும் குறைவாக உள்ளதா? அதே சமயம் ஒரே மாதிரியான தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் தக்காளியும், ரவையும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் தக்காளி தோசை சுடலாம். இந்த தக்காளி தோசை 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும்.

முக்கியமாக இந்த தோசை சுடுவது மிகவும் சுலடதக இருக்கும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும். ஒருமுறை இப்படி தோசை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள்.

Tomato Rava Dosa How To Make a Thakkali Rava Dosa

உங்களுக்கு தக்காளி ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரவா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* தக்காளி - 3
* வரமிளகாய் - 3
* இஞ்சி - 1 சிறிய துண்டு

ஊற வைப்பதற்கு...

* ரவை - 1 கப்
* அரிசி மாவு - 1 கப்
* கோதுமை மாவு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 பெரிய டம்ளர் + தேவையான அளவு

பிற பொருட்கள்...

* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய 3 தக்காளி, 3 வரமிளகாய், 1 சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து, அத்துடன், 1 கப் ரவை, 1 கப் அரிசி மாவு, 1/2 கப் கோதுமை மாவு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டம்ளர் நீரை ஊற்றி நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஊற வைத்த ரவையுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகுத் தூள் மற்றும் சீரகத்தை கையால் நசுக்கி சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* இப்போது கலவையானது மிகவும் கெட்டியாக இருக்கும். இந்நிலையில் அதில் ரவா தோசை பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை அள்ளி ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, மொறுமொவென்று வேக வைத்து எடுத்தால், சுவையான தக்காளி ரவா தோசை தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion