Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
சத்தான... தக்காளி ஆம்லெட்
காலை வேளையில் ஒரு சத்தான காலை உணவை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் 20 நிமிடத்தில் ஒரு ஆரோக்கியமான மற்றும் ருசியான காலை உணவை சமைக்க வேண்டுமா? அப்படியானால் தக்காளி ஆம்லெட் செய்யுங்கள்.
காலை வேளையில் ஒரு சத்தான காலை உணவை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் 20 நிமிடத்தில் ஒரு ஆரோக்கியமான மற்றும் ருசியான காலை உணவை சமைக்க வேண்டுமா? அப்படியானால் தக்காளி ஆம்லெட் செய்யுங்கள். தக்காளி ஆம்லெட் என்றதும் பலரும் முட்டை சேர்த்து செய்யக்கூடியதாக நினைக்கலாம். ஆனால் இது ஒரு சைவ ஆம்லெட். இதற்கு முட்டை எதுவும் தேவையில்லை. கடலை மாவு, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா பொடிகள் இருந்தால் எளிதில் செய்யலாம். இந்த தக்காளி ஆம்லெட் டயட்டில் இருப்போருக்கு ஏற்றதும் கூட. பேச்சுலர்களும் இதை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு தக்காளி ஆம்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 கப்
* தக்காளி - 2
* வெங்காயம் - 1
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 1
* கொத்தமல்லி - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* ஆம்லெட் கலவையானது மிகவும் நீராக இல்லாமல், மிதமான நிலையில் இருக்க வேண்டும்.
* இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் ஒரு கரண்டி ஆம்லெட் கலவையை ஊற்றி லேசாக பரப்பி விட வேண்டும்.
* பின்பு அந்த ஆம்லெட்டை சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அடிப்பகுதி பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் ஆகும் போது தோசைக்கரண்டி பயன்படுத்தி திருப்பிப் போட வேண்டும். முன்னும் பின்னும் மொறுமொறுப்பானதும் எடுத்தால், சுவையான தக்காளி ஆம்லெட் தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications

