Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
வழக்கமா சுடுற தோசைக்கு பதிலா.. தக்காளி தோசை சுட்டு கொடுங்க.. எக்ஸ்ட்ரா 2 தோசை சாப்பிடுவாங்க...
Tomato Dosa Recipe In Tamil: காலை வேளையில் உங்கள் வீட்டில் எப்போதும் தோசை தான் சுடுவீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் தோசை சுடுவீர்களா? இப்படி ஒரே மாதிரி தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட ஒரு மொறுமொறுப்பான வெரைட்டி தோசை சுட நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் நன்கு கனிந்த தக்காளி உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டே அட்டகாசமான சுவையில் தக்காளி தோசையை சுடலாம். இந்த தக்காளி தோசையை கெட்டி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

குறிப்பாக இந்த தோசையை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், 1 தோசை சாப்பிடும் குழந்தை இன்னொரு தோசையை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவில் இது சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு தக்காளி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு - 2 கப்
* தக்காளி - 2
* பெரிய வெங்காயம் - 1
* வரமிளகாய் - 2
* பூண்டு - 2 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தக்காளி, வெங்காயம், பூண்டு, வரமிளகாய்
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் தோசை மாவை எடுத்து, அத்துடன் அரைத்து
வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள தோசை மாவைக் கொண்டு தோசை ஊற்றி எண்ணெய் ஊற்றி முன்னும்,
பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான தக்காளி தோசை தயார்.
Image Courtesy: Kannan's Kitchen



Click it and Unblock the Notifications









