Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
எப்பவும் ஒரே மாதிரி தோசை சுடாம.. ஒருடைம் இப்படி தாளிச்ச தோசை செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
Thalicha Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் டிபனாக இருக்குமா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் தோசையை தான் விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள் வீட்டில் தோசையை தான் அடிக்கடி செய்வீர்களா?
அதுவும் எப்போதும் ஒரே மாதிரி ப்ளைன் தோசை தான் சுடுவீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சற்று வித்தியாசமான தோசையை சுடுங்கள். அது தான் தாளிச்ச தோசை. இந்த தாளிச்ச தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இந்த தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி போன்றவை அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு தாளிச்ச தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாளிச்ச தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி மாவு - 1 கப்
* ரவை - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிறிய அளவிலான வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - தேவையான அளவு
* கடுகு
* பச்சை மிளகாய்
* கறிவேப்பிலை
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் ரவை, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1/4
டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட்டை சேர்க்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, சிறிது நீரை
ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மாவை நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு தோசை சுடுவதற்கு ஒரு தவா அல்லது தோசைக் கல்லை அடுப்பில்
வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/4 டீஸ்பூன்
கடுகு, சிறிது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் 2 கரண்டி மாவை ஊற்றி, அடை தோசை போன்று லேசாக பரப்பி,
குறைவான தீயில் வைத்து, மூடி வைத்து 1 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 1 நிமிடம் கழித்து தோசையை திருப்பிப் போட்டு ஒரு நிமிடம் வேக
வைத்து, தோசையை பொன்னிறமாக சுட்டு எடுத்தால், தாளிச்ச தோசை தயார்.
இதேப் போன்று அனைத்து மாவையும் தாளிச்ச தோசை போன்று சுட்டு
எடுங்கள்.



Click it and Unblock the Notifications