Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
கும்பகோணம் ஸ்டைல் சுவையான வெங்காய சாம்பார் ரெசிபி... இதோட டேஸ்ட்ட அடிச்சுக்க வேற சாம்பாரே இல்ல...!
Kumbakonam Style Sambar Recipe: தமிழ்நாடு உணவுகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதன் சுவைக்காகவும், தனித்துவத்திற்காகவும் பிரபலமானவை. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு உணவென்றால் அது சாம்பார்தான். அனைத்து தமிழ்நாட்டு வீடுகளிலும் வாரத்திற்கு இரண்டு நாளாவது சாம்பார் நிச்சயம் இருக்கும்.
சாம்பாரிலும் டிபன் சாம்பார் மற்றும் சாதத்திற்கான சாம்பார் என்று இரண்டு உள்ளது. இந்த இரண்டு சம்பாரிலும் பல்வேறு காய்கறிகள் சேர்த்து பல சாம்பார்கள் தயாரிக்கலாம். அந்த வகையில் கும்பகோணம் ஸ்டைல் வெங்காய சாம்பார் ஒரு சுவையான மற்றும் எளிமையான சாம்பார் வகையாகும். இதனை டிபன் மற்றும் சாதம் என இரண்டுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த வெங்காய சாம்பார் பெரும்பாலான தென்னிந்திய வீடுகள் மற்றும் உணவகங்களில் பிரபலமானது. குறிப்பாக பல பிரபலமான தென்னிந்திய உணவகங்களில் இந்த சாம்பார் பிரதானமான உணவாக இருக்கும். இந்த சாம்பாருடன் பரிமாறப்படும் போது உங்களுக்கு பிடித்தவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள் என்பது மட்டும் உறுதி. இந்த சுவையான சாம்பாரை எப்படி செய்யலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 15 முதல் 25
தக்காளி - 1
மஞ்சள் தூள் - தேவையான அளவு
சாம்பார் தூள் - 11/2 ஸ்பூன்
புளித்தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - சிறிதளவு
வரமிளகாய் - 5
பெருங்காயம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
- இந்த கும்பகோணம் ஸ்டைல் வெங்காய சாம்பாரை செய்ய ஆரம்பிக்க, பருப்பை மஞ்சள் தூள், உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும். பருப்பு ஆறியதும் துவரம் பருப்பை மசித்து தனியாக வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில், ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து, அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். அதன்பின் 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்கு வறுக்கவும். வெங்காயம் நன்கு வறுக்கப்பட்டவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் சாம்பார் தூள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீர் சேர்க்கவும்.
- குக்கரை மூடி, வெங்காய சாம்பார் மசாலாவை 2 விசில் விட்டு, அடுப்பை அணைக்கவும். அழுத்தத்தை இயற்கையாக வெளியேற அனுமதிக்கவும்.
- குக்கரைத் திறந்து, மசித்த துவரம் பருப்பைச் சேர்த்து, வெங்காயச் சாம்பாரை நன்றாகக் கலக்கவும். உப்பை சரிபார்த்து உங்களின் தேவைக்கேற்ப உப்பின் அளவை சரிசெய்யவும்.
- அதன்பின் ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் மற்றும் சிறிது வெந்தயம் சேர்த்து நன்கு தாளிக்கவும். இறுதியாக சிறிது கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இந்த தாளிப்பை வெங்காய சாம்பார் மீது டெம்பரிங் ஊற்றி சாம்பாரை சிறிது கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி, வெங்காய சாம்பாரை பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
- இந்த சுவையான கும்பகோணம் ஸ்டைல் வெங்காய சாம்பாரை இட்லி, முறுகலான தோசை மற்றும் சாதத்துடன் பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications
