Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
மலாய் குலாப் ஜாமூன்
ரக்சா பந்தன் வரப்போகிறது. அனைவரும் தங்கள் அண்ணன்களுக்கு ஏதேனும் ஸ்பெஷல் ரெசிபியை செய்து அசத்த ஆசைப்பட்டால், அத்தகையவர்களுக்காக ஒரு எளிமையான முறையில் மலாய் குலாப் ஜாமூன் ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இந்த ரெசிபியை ரக்சா பந்தன் அன்று அண்ணன்கள் கையில் ராக்கி கட்டும் போது, செய்து கொடுத்தால், அண்ணனின் பாராட்டை நிச்சயம் பெறலாம்.
இப்போது அந்த மலாய் குலாப் ஜாமூன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பால் பவுடர் - 1 கப்
ரவை - 4 டேபிள் ஸ்பூன்
மைதா - 4 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உள்ளே நிரப்புவதற்கு...
மலாய் - 1 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
சர்க்கரை பாகுவிற்கு...
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, பால் பவுடர், பால், பேக்கிங் பவுடர் மற்றும் நெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மணிநேரம் கழித்தப் பின்னர், அதில் மீண்டும் சிறிது பால் ஊற்றி, மென்மையாக பிசைந்து, 3 மணிநேரம் ஊற வைத்து, பின் சிறு உருண்டைகளாக்கி, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அதே நேரத்தில், மற்றொரு அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை போட்டு, தீயை குறைவில் வைத்து சர்க்கரை கரையும் வரை கிளறி, அதனை இறக்கி வடிகட்டி, குளிர வைக்க வேண்டும்.
இப்போது நெய்யானது காய்ந்திருக்கும். இந்நிலையில் தீயை குறைவில் வைத்து, உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, சர்க்கரை பாகுவில் போட்டு, 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
3-4 மணிநேரம் ஆனப் பின்பு, ஜாமூன்களை வெளியே எடுத்து, அதில் உள்ள பாகுவை லேசாக பிழிந்துவிட்டு, அதன் நடுவே லேசாக வெட்டி, அதன் நடுவே மலாயை வைத்து, அதன் மேல் துருவிய தேங்காயை தூவி விட வேண்டும். இதேப் போல் அனைத்து குலாப் ஜாமூன்களையும் செய்ய வேண்டும்.
இப்போது சூப்பரான மலாய் குலாப் ஜாமூன் ரெடி!!!



Click it and Unblock the Notifications
